Home கனடா பிரிட்டிஷ் கொலம்பியாவில் சிகப்பு எச்சரிக்கை

பிரிட்டிஷ் கொலம்பியாவில் சிகப்பு எச்சரிக்கை

by Jey

காலநிலை அனர்த்தங்களினால் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கிய பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்திற்கு மீளவும் சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலநிலை அனர்த்தங்கள் தொடர்பில் இவ்வாறு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் பலத்த புயல் காற்று வீசக்கூடிய சாத்தியங்கள் உண்டு எனவும், கன மழை பெய்யும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கனேடிய சுற்றாடல் திணைக்களத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்தில் ஏற்கனவே ஏற்பட்டது போன்று மீளவும் மோசமான அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

விக்டோரியா, வான்கூவார் மற்றும் அபோட்ஸ்போர்ட் ஆகிய பிரதேசங்களில் ஆபத்து ஏற்படக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

related posts