பூர்வகுடி மக்களிடையே ஒபியாய்டு மரணங்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக ஒன்றாரியோ மாகாணத்தில் ஒபியாய்டு மருந்து பயன்பாட்டினால் உயிரிழந்தவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பூர்வகுடியினர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் ஒபியாய்டு அதி மாத்திரை பயன்பாட்டினால் உயிரிழந்த பூர்வகுடியினத்தவர்களின் எண்ணிக்கை 116 எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு முன்னைய ஆண்டில் 50 மரணங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மருந்து அதிமாத்திரைப் பயன்பாட்டினால் பூர்வகுடியின சமூகத்தினர் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கோவிட் பெருந்தொற்றுக்கு மத்தியிலும் ஒபியாய்டு உள்ளிட்ட பல்வேறு மருந்துப் பொருட்கள் போதைப் பொருட்கள் பயன்பாடு தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் போக்கினை அவதானிக்க முடிகின்றது என தெரிவிக்கின்றனர்.