மாகாணங்களுக்கு இடையில் பயணத் தடை விதிக்கப்பட வேண்டுமென அல்பர்ட்டா மாகாண மருத்துவர் Joe Vipond தெரிவித்துள்ளார்.
தென் ஆபிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள புதிய கோவிட் திரிபு பரவுகையை கட்டுப்படுத்துவதற்கு மாகாணங்களுக்கு இடையிலும் பயணத் தடை அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த புதிய வகை திரிபு தென் ஆபிரிக்காவிற்கு வெளியேயும் பரவியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாண அரசாங்கம் திடமான தீர்மானம் ஒன்றை எடுத்து மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையை அமுல்படுத்தினால் பரவுகையை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.