Home கனடா ஒன்றாரியோவில் கோவிட் நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

ஒன்றாரியோவில் கோவிட் நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

by Jey

ஒன்றாரியோ மாகாணத்தில் கோவிட் நோயாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆறு மாதங்களில் முதல் முறையாக நோய்த் தொற்று உறுதியாளர் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது.

இன்றைய தினம் 964 கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளதுடன் ஒரு கோவிட் மரணமும் பதிவாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை 927 பேரும், சனிக்கிழமை 854 பேரும் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

மாகாணத்தில் மொத்தமாக 11.2 மில்லியன் பேருக்கு கோவிட் தடுப்பூசி முழுமையாக ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

related posts