கன்சாஸ் சிட்டி (அமெரிக்கா): கொலை வழக்கில் தண்டனை பெற்று 43 ஆண்டுகள் சிறையில் இருந்தவருக்கு, தற்போது விடுதலை கிடைத்துள்ளது. இவரது நிலையா அறிந்த மக்கள் 14.5 லட்சம் டாலர்கள் அதாவது சுமார் ரூ.11 கோடி திரட்டியுள்ளனர். அந்த நபர் தவறாக தண்டிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் நீதிபதி அவரது தண்டனையை ரத்து செய்தார். இதைத் தொடர்ந்து, மக்கள் நன்கொடை வசூலிக்கும் பிரச்சாரத்தைத் தொடங்கினர்.
நன்கொடை சேகரிக்கும் பிரச்சாரம்
மிட்வெஸ்ட் இன்னசென்ஸ் திட்டத்தின் நோக்கம் அப்பாவி மக்களுக்கு உதவுவதாகும். அதில், தவறான தீர்ப்பின் காரணமாக நீண்ட காலம் சிறையில் வாடி வந்த கெவின் ஸ்டிரிக்லேண்டின் (Kevin Strickland) விடுதலைக்காக பிரச்சாரம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சிறையில் இளமை காலத்தை தொலைத்தவருக்கு கண்ணியமான வாழ்க்கை வாழ உதவிடும் வகையில், நன்கொடைகளை திரட்ட GoFundMe என்ற இயக்கம் தொடங்கப்பட்டது. 62 வயதான ஸ்டிரிக்லேண்ட் மீதமுள்ள காலத்தை கவுரவமாக கழித்திட இந்த பணம் உதவும். தொலைத்த இளமை பருவத்தை திரும்ப பெற முடியாது என்றாலும், இந்த பணம் அவருடையை வாழ்க்கையை எளிதாக்கும்.