இவர் தமிழில் மின்சார கனவு படத்தில் நடித்து இந்தியில் முன்னணி நடிகையாக உயர்ந்த கஜோலின் தங்கை ஆவார். தனிஷாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வலைத்தளத்தில் தனிஷா வெளியிட்டுள்ள பதிவில், ‘‘எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறேன்‘‘ என்று கூறியுள்ளார். கொரோனா பரவல் குறித்து தனிஷா கூறும்போது, ‘‘சினிமா துறைக்கு இது மோசமான காலகட்டமாக உள்ளது. படப்பிடிப்புகளில் கவனமாக இருங்கள்.
உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள். படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது அனைவரும் முககவசம் அணியுங்கள். படப்பிடிப்பு தொடங்கும்போது முககவசத்தை கழற்றுங்கள். ஒவ்வொரு காட்சியை படமாக்கிய பிறகு கைகளை சுத்தப்படுத்தி கொள்ளுங்கள். கொரோனாவுக்கு நாம் பயந்து வாழவும் முடியாது. ஆனாலும் கவனமாக இருங்கள்‘‘ என்று கூறியுள்ளார்.