சுகாதார வழிகாட்டல்களில் மாற்றம் கிடையாது என ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஒன்றாரியோவின் பிரதம மருத்துவ அதிகாரி டொக்டர் கிய்ரன் மூர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் குறித்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒமிக்ரோன் திரிபு கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதார வழிகாட்டல்களில் மாற்றமில்லை என அறிவித்துள்ளார்.
மாகாணத்திலும் மேலும் தொற்று உறுதியாளர்கள் பதிவாகக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
கனடாவில் ஒமிக்ரோன் திரிபினால் பாதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திரிபின் தாக்கம் அதிகரித்தால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்ப்படும் எனவும் தற்போதைக்கு அவ்வாறான தேவை கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.