ஒன்றாரியோ மாகாணத்தில் சுமார் நான்கு ஒமிக்ரோன் தொற்று உறுதியாளர்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் இரண்டு பேருக்கு கோவிட் ஒமிக்ரோன் திரிபு பரவியுள்ளது என ஒட்டாவா பொதுச் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நைஜீரியாவிலிருந்து நாடு திரும்பிய இருவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதியாகியிருந்தமை கண்டறியப்பட்டிருந்தது.
ஒட்டாவா மற்றும் ஹமில்டனைச் சேர்ந்த தலா இருவருக்கு இவ்வாறு ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒமிக்ரோன் திரிபினால் பாதிக்கப்பட்டவர்கள் தற்பொழுது சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.