கனடாவின் மிகப் பெரிய வைத்தியசாலை ஒன்றாரியோ மாகாணத்தில் நிறுவப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாகாண முதல்வர் டக் போர்ட் மற்றும் சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியோட் ஆகியோர் இது குறித்து விரைவில் அறிவிக்க உள்ளனர்.
மிஸ்ஸிசாகுவாவில் காணப்படும் வைத்தியசாலையை விஸ்தரிப்பதன் மூலம் கனடாவின் மிகப்பெரிய வைத்தியசாலை உருவாக்கப்பட உள்ளது.
மிஸ்ஸிசாகுவா கிரெடிட்வெலி மற்றும் மிஸ்ஸிசாகுவா வைத்தியசாலை என்பன ஒன்றாக இணைக்கப்பட உள்ளது.