கனடாவில் போலியான கோவிட் சான்றிதழ்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இது குறித்து எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கனேடிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் இந்த விடயம் பற்றி தெரிவித்துள்ளனர்.
போலியான கோவிட் பரிசோதனை அறிக்கை மற்றும் கோவிட் தடுப்பூசி சான்றிதழ்கள் என்பன எல்லைப் பகுதிகளில் சமர்ப்பிகப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த போலிச் சான்றிதழ்கள் மற்றும் போலி கோவிட் பரிசோதனை அறிக்கைகள் என சந்தேகிக்கப்படும் ஆவணங்களை காணக்கிடைத்தது என விமான நிலையங்களிலும் தரைவழி எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த சந்தேகத்திற்கு இடமான சான்றிதழ்கள் பரிசோதனை அறிக்கைகள் குறித்து அடுத்த கட்டந நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.