தமிழகம் முழுதும் 32.7 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடந்து வருகிறது. இதுமட்டுமின்றி, பல மாவட்டங்களில், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் சாகுபடியும் நடக்கிறது.இதனால், உரங்களின் தேவை அதிகரித்து வருகிறது. எனவே, தமிழகத்திற்கு கூடுதல் உரம் ஒதுக்கும்படி, மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தியது.
இந்த கோரிக்கையை ஏற்று, காரைக்கால் துறைமுகத்திற்கு, 45 ஆயிரம் டன்கள் யூரியா அனுப்ப பட்டு உள்ளது. இதில் இருந்து தினமும், 300 டன் உரம் லாரிகளில் டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. துாத்துக்குடி துறைமுகத்திற்கு, 5ம்தேதி 35 ஆயிரம் டன் பொட்டாஷ் வரவுள்ளது.
இதுமட்டுமின்றி, நடப்பு டிசம்பர் மாதத்திற்கு, 94 ஆயிரத்து 650 டன் யூரியா; 24 ஆயிரம் டன்கள் கூட்டு உரம்; 9,500 டன பொட்டாஷ் என, 1.28 லட்சம் டன் உர வகைகளை வழங்க மத்திய உரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
இவை இந்த மாத இறுதிக்குள் வந்தடையும் என்பதால், தட்டுப்பாடின்றி உர வகைகளின் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என, வேளாண்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.