Home இந்தியா தமிழகத்தில் நலிந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிதி உதவி

தமிழகத்தில் நலிந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிதி உதவி

by Jey

நலிந்த நாட்டுப்புற கலைஞர்கள், தேவையான கருவிகள், ஆடை, ஆபரணங்கள் வாங்க, 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில், நான்கு லட்சத்துக்கும் அதிகமான நாட்டுப்புற கலைஞர்கள் உள்ளனர். இவர்களில், நலிந்த நிலையில், 1.50 லட்சம் பேர் உள்ளனர். மொத்த கலைஞர்களில், 85 ஆயிரம் பேர் மட்டுமே நலவாரியத்தில் பதிவு செய்துள்ளனர்.

பதிவு செய்துள்ள கலைஞர்களில், நலிவுற்ற நிலையில் உள்ள 500 பேருக்கு, பதிவு மூப்பு அடிப்படையில் இசைக் கருவிகள்; நாடக, நாட்டுப்புற ஆடல் கலைஞர்களுக்கான ஆடை ஆபரணங்கள் வாங்க, 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட உள்ளது.

இவற்றைப் பெற, நலிந்த கலைஞர்கள், கலை பண்பாட்டு துறை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

related posts