ஒன்றாரியோ மாகாணம் லண்டனில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் எட்டு வயதான சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
76 வயதான பெண் ஒருவர் செலுத்திய வாகனம் சில வாகனங்களில் மோதுண்டதுடன் வீதியில் பயணித்த பாதசாரிகள் மீதும் மோதியுள்ளது.
இந்த விபத்தில் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களில் அதிகமானவர்கள் சிறுவர் சிறுமியர் என்பது குறிப்பிடத்தக்கது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் தனது இரங்கலை வெளியிட்டுள்ளார்.