Home கனடா கனடாவில் வனவிலங்குகளுக்கு கோவிட் தொற்று

கனடாவில் வனவிலங்குகளுக்கு கோவிட் தொற்று

by Jey

கனடாவில் வனவிலங்குகளுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டமை பற்றிய தகவல் முதல் தடவையாக பதிவாகியுள்ளது.

மூன்று மான்களுக்கு இவ்வாறு கோவிட் தொற்று பதிவாகியுள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை திணைக்களம் இது தொடர்பிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கியூபெக்கின் எஸ்ட்ரி பிராந்தியத்தில் இந்த மான்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

முதல் தடவையாக காட்டு விலங்குகளிடம் கனடாவில் கோவிட் தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகின் ஏனைய பல நாடுகளிலும் கோவிட் தொற்றுக்கு இலக்கான விலங்குகள் பற்றிய தகவல்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

related posts