பாலின மாற்று சிகிச்சைகளுக்கு தடை விதிக்கும் சட்டம் கனேடிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கனடாவின் 44ம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட முதல் சட்டமாக இந்த பாலின மாற்று சிகிச்சை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டப் பிரேரணைக்கு ஏகமனதாக ஆதரவு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வயது வந்தவர்கள் மற்றும் சிறுவர்கள் ஆபத்தான பாலின மாற்று சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு தடை விதிக்கும் வகையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாலின மாற்று சிகிச்சைகளை செய்வோருக்கு குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.