ஒன்றாரியோவில் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றுகை வயது எல்லை 50 ஆக குறைக்கப்பட உள்ளது.
இந்த மாத இறுதியில் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றுவதற்கான வயது எல்லை 50 ஆக குறைக்கப்படும் என மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது.
சமூகத்தில் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட வேண்டுமென்ற இலக்கின் அடிப்படையில் மாகாண அரசாங்கம் வயது எல்லையை குறைத்துள்ளது.
இரண்டாவது டோஸ் தடுப்பூசி ஏற்றிக் கொண்டு ஆறு மாதங்கள் கடந்தவர்களுக்கு இவ்வாறு பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட உள்ளது.