Home கனடா றொரன்டோவில் ஒபியோயிட் அதிமாத்திரை பயன்பாடு அதிகரிப்பு

றொரன்டோவில் ஒபியோயிட் அதிமாத்திரை பயன்பாடு அதிகரிப்பு

by Jey

றொரன்டோவில் ஒபியோயிட் அதி மாத்திரை பயன்பாடு அதிகரித்துள்ளதாக நகர பொதுச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒழுங்குப்படுத்தப்படாத மருந்து பொருட்கள் பயன்பாடு அதிக ஆபத்தினை உருவாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாரத்தின் ஆரம்பத்தின் இரண்டு நாட்களில் மட்டும் ஒபியோயிட் அதி மாத்திரை பயன்பாடு தொடர்பிலான 108 சம்பவங்கள் நகரில் பதிவாகியுள்ளது.

2017ம் ஆண்டின் பின்னர் கடந்த புதன்கிழமை ஒரே நாளில் 60 சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவர்களின் அறிவுறுத்தல்களை மீறி இவ்வாறு அதி மாத்திரை அளவில் மருந்துப் பொருட்களை பயன்படுத்துவது உயிராபத்தை ஏற்படுத்தக் கூடியது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

related posts