Home கனடா 1.5 மில்லியன் கோவிட் மாத்திரைகள் கொள்வனவு செய்யும் கனடா

1.5 மில்லியன் கோவிட் மாத்திரைகள் கொள்வனவு செய்யும் கனடா

by Jey

கனேடிய அரசாங்கம், 1.5 மில்லியன் கோவிட் மாத்திரைகளை கொள்வனவு செய்ய உள்ளது.

கனேடிய சுகாதாரத் திணைக்களம் அனுமதி வழங்கும் என்ற எதிர்பார்ப்பில் அரசாங்கம் 1.5 மில்லியன் கோவிட் தடுப்பு மாத்திரைகளை கொள்வனவு செய்ய உள்ளது.

பிரபல நிறுவனமான பைசர் நிறுவனத்துடன் இது தொடர்பில் கனேடிய அரசாங்கம் உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளது.

மாத்திரைகளை பயன்படுத்துவது மிகவும் சுலபமானது என நம்பப்படுகின்றது.

தடுப்பூசிகளுக்கு மேலதிகமாக இந்த மாத்திரைகளையும் பயன்படுத்த உள்ளதாகவும் இது கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

related posts