Home கனடா கனடாவில் ஊழிப்படைக்கு பற்றாக்குறை நிலை

கனடாவில் ஊழிப்படைக்கு பற்றாக்குறை நிலை

by Jey

கனடாவில் ஊழியப்படைக்கு பற்றாக்குறை நிலைமை உருவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் தொழிற்சந்தையில் போதியளவு ஆளணி வளமின்மையினால் பல நிறுவனங்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றன.

இதன் காரணமாக தடுப்பூசி குறித்த சட்ட விதிகளையும் சில நிறுவனங்கள் மாற்றிக் கொண்டுள்ளன.

கடந்த காலங்களில் கட்டாயம் தடுப்பூசி ஏற்ற வேண்டுமென நிபந்தனை விதித்த நிறுவனங்கள் ஒமிக்ரோன் திரிபு பரவி வரும் நிலையிலும், நிபந்தனைகளை தளர்த்திக் கொண்டுள்ளன.

ஆளணி வளப்பற்றாக்குறை காரணமாக இவ்வாறு கோவிட் நடைமுறையில் அரசாங்கம் நெகிழ்வான போக்கினைப் பின்பற்றி வருகின்றது.

கட்டாய தடுப்பூசி கொள்கைகளுக்கு பதிலாக பரிசோதனைகளை அதிகரித்து பணியாளர்களை தக்க வைத்துக்கொள்ள நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன.

ஊழிய சந்தையில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை நிலைமையினால் இந்த சூழ்நிலை உருவாகியுள்ளது.

 

related posts