ஹமில்டன் மற்றும் பீல் பிராந்தியங்களிலும் ஒமிக்ரோன் கேகாவிட் திரிபு தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர்.
வெளிநாடு சென்று நாடு திரும்பிய ஒருவரின் நேரடித் தொடர்பாடல் ஒருவருக்கு ஒமிக்ரோன் திரிபு தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தொற்று பரவுகை வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான புதிய திரிபுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முழு அளவில் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஹமில்டனில் பதிவான ஒமிக்ரொன் தொற்று உறுதியாளர் தென்ஆபிரிக்காவிலிருந்து நாடு திரும்பியவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.