Home இந்தியா “இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் காலமானார்

“இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் காலமானார்

by Jey

இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் , சென்னையில் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார்.அவரின் இறுதிச்சடங்கு சென்னையில் இன்று மாலை 4 மணி அளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி பயின்ற அவர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் முதல் பெண் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். மன நோயாளிகளின் சிகிச்சையில், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் தனி முத்திரை படைத்த சாதனையாளர்.

அவர் சிறந்த மருத்துவர் மட்டுமல்லாது சிறந்த நிர்வாகத் திறனும் படைத்தவர். சென்னையில் அவர் நிறுவி இயங்கி வரும் ‘மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவனம் (SCARF)’ அவரது பங்களிப்புகளில் மிகவும் குறிப்பிடத் தக்கவையாகும்.அவரது சேவையைப் பாராட்டி இந்திய அரசு பத்ம பூசண் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து,அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில்,சாரதா மேனன் அவர்களின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக,வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் முதல்வர் மு.க ஸ்டாலின் ,”இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் அவர்கள் உடல்நலக்குறைவால் தனது 98 வயதில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தத்திற்குள்ளானேன் , என தெரிவித்துள்ளார்.

related posts