தென் ஆபிரிக்காவில் நிர்க்கதியாகியுள்ள கனேடியர்கள நாடு திரும்புவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
விடுமுறைக்காக நாடு திரும்பவும், பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்ப முடியாதிருப்பவர்களுக்கும் இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.
ஒமிக்ரோன் திரிபினைத் தொடர்ந்து கனடா, தென் ஆபிரிக்க நாடுகளுக்கான பயணக்கட்டுப்பாடுகளை கடுயைமாக்கியுள்ளது.
தென் ஆபிரிக்கா உள்ளிட்ட அந்த வலயத்தைச் சேர்ந்த பத்து நாடுகளுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தென் ஆபிரிக்காவிலிருந்து கனடா திரும்ப முடியாதுள்ள கனேடியர்களுக்கு தற்காலிக அடிப்படையில் சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.
கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் இவ்வாறு நாடு திரும்புவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
48 மணித்தியாங்களுக்குள் எடுக்கப்பட்ட கோவிட் நெகடிவ் பரிசோதனை சான்றிதழுடன் பயணிகள் நாடு திரும்ப முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.