Home கனடா சீனாவிற்கான கனேடிய தூதுவர் பதவி விலகல்

சீனாவிற்கான கனேடிய தூதுவர் பதவி விலகல்

by Jey

சீனாவிற்கான கனேடிய தூதுவர் டொமினிக் பார்டன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் மிகவும் கடுமையான ராஜதந்திர முரண்பாட்டு நிலைமை நீடித்து வந்த காலப் பகுதியில் பார்டன் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டின் இறுதியில் பார்டன் தனது பதவியை ராஜினாமா செய்கின்றார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்டனின் ராஜினாமாவை  மிகவும் மரியாதையுடனும், நன்றியுடனும் ஏற்றுக் கொள்வதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் நெருக்கடியான நிலைமை நீடித்த காலத்தில் மிகவும் அர்ப்பணிப்புடன் கடமைகளை முன்னெடுத்தமைக்காக நன்றி பாராட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

related posts