பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் அல்பர்ட்டா ஆகிய மாகாணங்களில் அண்மைய நாட்களில் கூடுதல் இறப்பு வீதம் பதிவாகியுள்ளது.
கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த 2020ம் ஆண்டில் ஒட்டுமொத்த கனடாவிலும் இறப்பு வீதம் அதிகரிப்பினை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கனடாவின் மேற்கு மாகாணங்களான அல்பர்ட்டா மற்றும் பிரிட்டிஷ் கெலம்பிய மாகாணங்களில் சாதாரண இறப்பு வீத அதிகரிப்பினை விடவும் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.
பெருந்தொற்று நிலைமகளினால் பொதுவாக மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எனினும் இதனை விடவும் வெப்ப அலை மற்றும் அதி மாத்திரை அளவில் மருந்துப் பொருள் பயன்பாடு என்பனவும் குறித்த மாகாணங்களில் இறப்பு வீத அதிகரிப்பிற்கு பிரதான ஏதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.