பூர்வகுடியின பிரதிநிதிகளின் வத்திக்கான் விஜயம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ம் திகதி முதல் 20ம் திகதி வரையில் கனேடிய பூர்வகுடியினர் புனித பாப்பாண்டவரை சந்தித்து கலந்துரையாடத் திட்டமிட்டிருந்தனர்.
ஒமிக்ரோன் புதிய திரிபு தாக்கம் காரணமாக இந்த சந்திப்பு திட்டமிட்டவாறு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.