கனேடிய அரசாங்கம் அடுத்த ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ராஜதந்திர ரீதியில் புறக்கணிப்புச் செய்ய தீர்மானித்துள்ளது.
கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளாளர்.
இதன்படி, குளிர்கால மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டித் தொடர்களில் வீர வீராங்கனைகள் பங்கேற்க முடியும் என்ற போதிலும் அரசாங்க மட்ட அதிகாரிகள் எவரும் பங்கேற்கப் போவதில்லை.
இரு நாடுகளுக்கும் இடையில் ராஜதந்திர ரீதியில் முரண்பாட்டு நிலைமை நீடித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரை புறக்கணிப்புச் செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், கனடாவும் அந்தப் பட்டியலில் இணைந்து கொண்டுள்ளது.
சீனாவில் இடம்பெற்று வரும் கடுமையான மனித உரிமை மீறல்கள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல்களை எதிர்க்கும் நோக்கில் ராஜதந்திர ரீதியில் ஒலிம்பிக் போட்டித் தொடரை புறக்கணிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
உய்குர் சிறுபான்மை முஸ்லிம்கள் கடுமையான இன ஒடுக்குமுறைக்கும் இனச் சுத்திகரிப்பிற்கும் உள்ளாக்கப்படுவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனா மீது குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.