Home இலங்கை சபாநாயகர் நியாயம் வழங்காவிட்டால் நீதிமன்றின் உதவியை நாடுவோம் – எதிர்க்கட்சி

சபாநாயகர் நியாயம் வழங்காவிட்டால் நீதிமன்றின் உதவியை நாடுவோம் – எதிர்க்கட்சி

by Jey

சபாநாயகரே, இந்த சபைக்குள் நீங்கள் நேரில் கண்ட சம்பவங்கள் தொடர்பில் தீர்ப்பொன்றை அறிவியுங்கள். அவ்வாறு இல்லாவிட்டால் நாம் உயர்நீதிமன்றத்தை நாடுவோம்.”

இவ்வாறு எதிரணி பிரதம கொறடாவான லகஷ்மன் கிரியல்ல எம்.பி. தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று சபாநாயகர் அறிவிப்பு விடுத்த பின்னர் அது தொடர்பில் கருத்து வெளியிட்ட லக் ஷ்மன் கிரியல்ல எம்.பி. கூறியவை வருமாறு,

” நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தியமைக்கு நன்றி. குழு நியமனம் பற்றியும் குறிப்பிட்டீர்கள். அந்த குழு நியமனத்தின் எதிர்ப்பார்ப்பு குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்படவில்லை. இருந்தாலும் சரியான திசையில் செல்லும் என நம்புகின்றோம்.

நாடாளுமன்றத்தில் இரு நாட்களில் (டிசம்பர் 03,04) நடந்த சம்பவங்களுள் நீங்கள் நேரில் கண்ட சம்பவங்கள் தொடர்பில் தீர்ப்பொன்றை அறிவியுங்கள். ஏனெனில் நீங்கள்தான் சாட்சியாளர். சபாபீடத்தில் இருந்து அவதானித்தீர்கள்.

எனினும், நேரில் கண்ட சம்பவங்கள் பற்றி நீங்கள் கட்சித் தலைவர்கள்கூட்டத்தின்போதும் எதுவும் அறிவிக்கவில்லை.

நாடாளுமன்ற சிறப்புரிமை சட்டத்தின் பிரகாரம், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சபைக்குள்ளோ அல்லது தெரிவுக்குழுவிலோ தாக்குதல், திட்டமிட்ட அடிப்படையிலான இடையூறுகள் மற்றும் அவமதிப்பு இடம்பெற்றால் அவை உயர்நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்படக்கூடிய குற்றங்களாகும்.

பிரச்சினையை நாடாளுமன்றத்துக்கு வெளியில் எடுத்துச்செல்ல நாம் விரும்பவில்லை. இதற்குள்ளேயே தீர்த்துக்கொள்ளவே விரும்புகின்றோம். எனவே , நேரில் கண்ட விடயங்கள் தொடர்பில் நீங்கள் தீர்ப்பொன்றை அறிவியுங்கள். இல்லையேல் விரும்பமில்லாவிட்டாலும்கூட இந்த பிரச்சினையை உயர்நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்ல நேரிடும். ஏனெனில் இந்த நாடாளுமன்றத்தை ‘மிளகாய் தூள்’ குழுவுக்கு நிர்வகிக்க இடமளிக்கமுடியாது. இவர்களே கடந்த நாடாளுமன்றத்தையும் குழப்பினர்.” – என்றார்.

related posts