Home கனடா பாலின மாற்று சிகிச்சை தடைச் சட்டம் விரைவில் அமுல்

பாலின மாற்று சிகிச்சை தடைச் சட்டம் விரைவில் அமுல்

by Jey

பாலின மாற்று சிகிச்சை தடைச் சட்டம் விரைவில் கனடாவில் அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜனவரி மாத முதல் வாரமளவில் இந்த சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டத்திற்கு அரசியின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

எந்த வயதுப் பிரிவினைச் சேர்ந்தவர்களும் பாலின மாற்று சிகிச்சைகளை செய்து கொள்ள இனி வரும் காலங்களில் அனுமதிக்கப்பட மாட்டாது என  அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலின மாற்று சிகிச்சையை பிரச்சாரம் செய்வோர், தூண்டுவோர், லாபம் பெற்றுக்கொள்ள முயற்சிப்போர் உள்ளிட்ட அனைவருக்கும் தண்டனை வழங்க சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இரண்டு ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 7ம் திகதி குறித்த சட்டத்திற்கு செனட்சபை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

related posts