இந்தியாவின் மிகப்பெரிய சோகத்திற்கு இந்திய ராணுவத்தை கேலி செய்யும் சீனா
இந்தியாவின் மிகப்பெரிய சோகத்தை சீனா கேலி செய்கிறது. முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் இழப்பு குறித்து அந்நாட்டின் அதிகாரபூர்வ நாளேடு தெரிவித்திருக்கும் கருத்து அதிர்ச்சிளிக்கிறது.
சீனாவின் அதிகாரபூர்வ நாளேடான குளோபல் டைம்ஸ் (Global Times)ம் இந்திய ராணுவத்தை கிண்டல் செய்ததுடன், இந்திய ராணுவத்தில் ஒழுக்கம் மற்றும் போர் தயார்நிலையில் பெரும் குறைபாடு இருப்பதை இந்த ஹெலிகாப்டர் விபத்து நிரூபித்துள்ளது என்று கூறுகிறது.
பிபின் ராவத் (CDS General Bipin Rawat) மரணம் தொடர்பாக சீனாவின் இந்த கருத்து, இந்தியாவை சீண்டும் போக்காகவே பார்க்கப்படுகிறது.
சீனா போன்ற நாடுகள், தமிழகத்தின் குன்னூருக்கு இந்த விபத்தை பாராட்டி மகிழ்ச்சியில் உள்ளன. சீனாவின் அதிகாரபூர்வ நாளிதழ் குளோபல் டைம்ஸ் இந்திய ராணுவத்தை கிண்டல் செய்ததுடன், இந்திய ராணுவத்தில் ஒழுக்கம் மற்றும் போர் தயார்நிலையில் பெரும் குறைபாடு இருப்பதை இந்த ஹெலிகாப்டர் விபத்து நிரூபித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
அதைவிட வருத்தம் தரும் செய்தியாக, சில முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட, நம் நாட்டைச் சேர்ந்த சிலர், இப்படிப்பட்ட துக்க நேரத்திலும், சமூக வலைதளங்களில், மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற கர்னல் (Retired Colonel)அஜய் சுக்லா, ஜெனரல் பிபின் ராவத் இறந்த பிறகு கேக்கின் சில படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வாய்க்கு இனிமை தரும் வகையில் பண்டிகை காலங்களில் கேக் வெட்டுவது வழக்கம்.
ஆனால் நமது நாட்டின் ஓய்வுபெற்ற கர்னல் ஒருவர், இந்திய ராணுவ ஜெனரலின் மரணத்தைக் (CDS General Bipin Rawat Death) கொண்டாடுகிறார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது தொடர்பான கண்டனங்களை அடுத்து, அவர் இந்த ட்வீட்டை நீக்கிவிட்டார்.
இதேபோல், இந்திய விமானப்படையின் ஓய்வுபெற்ற விங் கமாண்டர் அனுமா ஆச்சார்யா தனது ட்வீட் ஒன்றில், ரோல் ஓவர், கேம் ஓவர், ஜெய் ஹிந்த் என்று எழுதினார். இந்த நாட்டின் ஜெனரலின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற விங் கமாண்டர் ஒருவர் இப்படி சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பது பலராலும் கண்டிக்கப்படுகிறது.
2020-ம் ஆண்டு தைவான் ராணுவ ஜெனரலின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது போல், ஜெனரல் பிபின் ராவத்தின் ஹெலிகாப்டரும் விபத்துக்குள்ளானது என பாதுகாப்பு நிபுணர் பிரம் சிலானி ட்வீட் செய்துள்ளார். அந்த விபத்தில், ஜெனரல் மற்றும் மேஜர் ஜெனரல் இருவர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். ஜெனரல் பிபின் ராவத்தின் ஹெலிகாப்டர் விபத்தில் பிரிகேடியர் நிலை அதிகாரி உட்பட 11 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்தியா மற்றும் தைவான் ஆகிய இரு நாடுகளுடனும் சீனா மோதல் போக்கை கடைபிடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு நாடுகளின் தளபதிகளும் ஒரே மாதிரியான விபத்தில் உயிரிழந்திருப்பதும் பல்வேறு ஊகங்களுக்கு உரமாக இருக்கிறது.
ஜெனரல் பிபின் ராவத்தை பலி கொண்ட ஹெலிகாப்டர் சம்பவம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்தார்.அதன் பிறகு ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 வீரர்களுக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது