பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் 450 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனேடிய காப்புறுதி முகவர் நிறுவனத்தின் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மாகாணத்தில் வரலாறு காணாத அளவிற்கு பாரியளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும், காப்புறுதி நிறுவன மதிப்பீடுகளை விடவும் இந்த இழப்புத் தொகை மேலும் அதிகமாக இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
காலநிலை மாற்றத்தினால் எதிர்காலத்தில் மேலும் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய அபாயங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சீரற்ற காலநிலை காரணமாக பெரும் எண்ணிக்கையிலான கால்நடைகளும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.