ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக , முதல் நாடாக இஸ்ரேல் அனைத்து வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு தடை விதித்து தனது நாட்டு எல்லையை கடந்த வாரம் மூடியது. ஒமைக்ரான் அச்சுறுத்தல் முழுவதுமாக நீங்காத நிலையில், வெளிநாட்டு பயணிகள் வருகைக்கான தடை மேலும் 10 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, வரும் 22 ஆம் தேதி வரை இந்த பயண தடையை நீட்டித்து இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தற்போது உள்ள பயணக்கட்டுப்பாடுகளின் படி, வெளிநாட்டில் இருந்து இஸ்ரேல் திரும்பும் சொந்த நாட்டு மக்கள், கொரோனா பரிசோதனை செய்து, அதன் முடிவுகள் வெளிவரும் வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒமைக்ரான் பரவியுள்ள நாடுகளில் இருந்து வரும் இஸ்ரேல் நாட்டு மக்கள், அரசு ஏற்பாடு செய்துள்ள ஓட்டலில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் இதுவரை 21- பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 93 லட்சம் மக்கள் தொகை கொண்ட இஸ்ரேலில், கொரோனா பெருந்தொற்றுக்கு இதுவரை 8,210- பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலில் 63 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது.