கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து மக்கள் பதற்றமடைய வேண்டியதில்லை என கியூபெக் மாகாண சுகாதார அமைச்சர் Christian Dubé தெரிவித்துள்ளார்.
மாகாணத்தில் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையை அவதானிக்க முடிகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும், இந்த நிலைமை எதிர்பார்க்கப்பட்டது எனவும், வைத்தியசாலை அனுமதிகள் ஒப்பீட்டளவில் குறைவு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்கள் மூலம் நோய்த் தொற்று பரவுகை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரங்களில் வைத்தியசாலை அனுமதிகள் அதிகரிக்கப்பட்டாலும் அது இரண்டாம் அலையின் வைத்தியசாலை அனுமதிகளை விடவும் குறைவாகவே காணப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.