கோவிட் கட்டுப்பாடு தொடர்பில் ஒன்றாரியோ மாகாண அமைச்சரவியல் விசேட கூட்டம் நடாத்தப்பட உள்ளது.
எவ்வாறெனினும், பாடசாலைகளை மூடுதல் மற்றும் முடக்க நிலை அறிவித்தல் ஆகியன பற்றி கவனம் செலுத்தப்பட போவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
முதல்வர் டக் போர்ட் தலைமையில் இந்த அமைச்சரவைக் கூட்டம் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
தடுப்பூசி சான்றிதழ் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் குறித்து இந்த கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது.
புதிய ஒமிக்ரோன் திரிபு குறித்தும் இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட உள்ளது.