மொன்றியலில் ஆசிரியர் மீது மாணவர் ஒருவர் கத்தி குத்து தாக்குதல் நடாத்தியுள்ளார்.
வகுப்பறையில் வைத்து இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Maxime Canuel என்ற நாற்பது வயதான ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கத்தி குத்துக்கு இலக்காகியுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உயிர் ஆபத்து கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் இடம்பெற்ற பாடசாலை மூடப்பட்டுள்ளதாகவும் செவ்வாய்க்கிழமை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் எது என்பது பற்றிய தகவல்களை வெளியிட முடியவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
John F. Kennedy என்ற உயர்நிலைப் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.