கனடாவில் கோவிட் பரவுகை அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
டெல்டா திரிபிற்கு பதிலீடாக ஒமிக்ரோன் திரிபு பரவுகை அதிகரித்தால் நிலைமைகள் மோசமடையும் என கனேடிய பொதுச் சுகாதார அதிகாரி டொக்டர் திரேசா டேம் தெரிவித்துள்ளார்.
டெல்டா திரிபினை விடவும் ஒமிக்ரோன் மூன்று மடங்கு வேகமாக பரவக்கூடியது என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
தற்பொழுது நாளாந்த தொற்று உறுதியாளர் 3300 ஆக காணப்படுவதாகவும் ஜனவரி மாதம் நடுப்பகுதி அளவில் இந்த எண்ணிக்கை 26600 ஆக உயர்வடையும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், ஒமிக்ரோனினால் ஏற்படக் கூடிய வைத்தியசாலை அனுமதிகள் மற்றும் மரணங்கள் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.