தென் ஒன்றாரியோவில் பலத்த காற்று வீசியதனால் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீர்மின் இணைப்பு கம்பிகள், மின்சார விநியோக கம்பிகள் என்பனவற்றுக் காற்று காரணமாக சேதங்கள் விளைவிக்கப்பட்டுள்ளன.
மேலும், மரங்கள் பல முறிந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் மணிக்கு 90 கிலோ மீற்றர் என்ற வேகத்தில் காற்று வீசியதாக சுற்றாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பலத்த காற்று காரணமாக சில பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.