அமெரிக்காவை தாக்கிய மோசமான சூறாவளி காற்றினால் கனேடியர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாக இதுவரையில் தகவல்கள் எதுவும் பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய அமெரிக்காவை தாக்கிய இந்த புயல் காற்றினால் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த சூறாவளி காற்றினால் கனேடியர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சூறாவளி குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
சூறாவளி தாக்கிய கென்டக்கி, இன்டியானா, அர்கானாஸ், இல்லியோன்ஸ், மிசூரி, மிஸ்ஸிஸிப்பி மற்றும் டென்னிசீ ஆகிய மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட 901 கனேடியர்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது வெளிநாடுகளில் வதியும் கனேடியர்களின் பதிவிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது எனவும் இதனை விடவும் அதிக எண்ணிக்கையிலான கனேடியர்கள் குறித்த பகுதிகளில் இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.