ஒன்றாரியோவில் ஒரு பகுதியில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக ஹைட்ரோ வன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பலத்த காற்று வீசியதனால் இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
80000 வாடிக்கையாளர்களுக்கு இவ்வாறு மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பலத்த காற்று காரணமாக 450000 பேர் மின்சார இணைப்பினை இழந்திருந்தனர் எனவும், பெரும் எண்ணிக்கையிலானவர்களின் மின்சார இணைப்பு மீள வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் மின்சார கம்பங்கள் முறிந்து வீழ்ந்திருந்த்து என தெரிவிக்கப்படுகின்றது.
மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியதனால் இவ்வாறு மின்சாரத் தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.