Home இந்தியா காகிதம் இல்லாமல் கணினி மூலம் சட்டசபை – சபாநாயகர் அப்பாவு

காகிதம் இல்லாமல் கணினி மூலம் சட்டசபை – சபாநாயகர் அப்பாவு

by Jey

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஏப்ரல் மாதம் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டமானது கலைவாணர் அரங்கில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது புனித ஜார்ஜ் கோட்டையில் மீண்டும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

“தமிழக சட்டப்பேரவைக் கூட்டமானது புனித ஜார்ஜ் கோட்டையில் ஜனவரி 5ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கும்.

கவர்னர் உரையைத் தொடர்ந்து பொது பட்ஜெட், மானியக் கோரிக்கை உள்ளிட்டவை நடைபெறும். கொரோனா விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படும்.

100 சதவீதம் தொடுதிரை உதவியுடன் கணினி மூலம் காகிதம் இல்லாமல் சட்டப்பேரவை நடைபெறும். பார்வையாளர்கள் அனுமதிப்பது குறித்து அலுவல் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். காகிதம் இல்லாமல் கணினி மூலம் சட்டசபை கூட்டத்தொடரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

 

related posts