Home உலகம் பழைய கார் பாகங்களை பயன்படுத்தி ஹெலிகாப்டர்

பழைய கார் பாகங்களை பயன்படுத்தி ஹெலிகாப்டர்

by Jey

பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு நபர், பழைய கார் பாகங்களை பயன்படுத்தி ஹெலிகாப்டர் தயாரித்து அதில் வானில் பறந்து சாதனை படைத்துள்ளார். பிரேசிலின் வடகிழக்கு மாநிலமான ரியோ கிராண்டே டோ நோர்டேவில் இந்த அசர வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.

பழைய மோட்டார் சைக்கிள், லாரி , கார் மற்றும் மிதிவண்டி போன்றவற்றிலிருந்து உதிரி பாகங்களை எடுத்து அவர் இந்த ஹெலிகாப்டரை வடிவமைத்துள்ளார். இந்த விமானம் வோல்க்ஸ்வேகன் பீட்டில் இன்ஜின் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜோவோ டயஸ் நகரத்தை சார்ந்த ஜெனிசிஸ் கோம்ஸ் என்ற அந்த நபர், வாகனங்கள் பயணிக்கும் சாலையை விமான ஓடுதளமாக பயன்படுத்தி தான் காரிலிருந்து உருவாக்கிய விமானத்தை இயக்கியுள்ளார். இதனை உள்ளூர்வாசிகள் படம்பிடித்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

related posts