Home இந்தியா 9.5 லட்சம் ஏழை மக்களுக்கு வீடு கட்டி தரும் திட்டம்..

9.5 லட்சம் ஏழை மக்களுக்கு வீடு கட்டி தரும் திட்டம்..

by Jey

கிரடாய் சார்பில் ஸ்டேட்காந்2021 என்ற 2-ம் நாள் மாநாடு சென்னை எம்.ஆர்.சி நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

வேளாண் துறைக்கு அடுத்தப்படியாக கட்டுமானத்துறை உள்ளது. கட்டுமானத்துறை எப்போதும் வளரும் தொழிலாக உள்ளது. ஒரு நாடு வளர்ந்து வருவதை வெளிப்படையாக காட்டுவது கட்டுமானம்தான். மாநிலத்தின் மொத்த வளர்ச்சிக்கு கட்டுமானத்துறை பெரிதும் உதவுகிறது. வேளாண்மைக்கு அடுத்து கட்டுமானத்துறை அதிகம் பேருக்கு வேலை வழங்குவதாக உள்ளது. கட்டுமானத்துறை மூலம் அரசுக்கு ரூ.5,976 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

கீழடியில் கிடைத்த பொருட்கள் மூலம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் சமூகம் பற்றி தெரிந்து கொண்டோம். தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், கட்டுமான தொழில் வளர்ச்சிக்கும் அரசு உதவுகிறது.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் வீடு மனைகள் விற்பனை 17 சதவீதம் அதிகரித்துள்ளது. 9.5 லட்சம் ஏழை மக்களுக்கு வீடு கட்டி தரும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். 2031-க்குள் தமிழகத்தை குடிசை இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். விண்னப்பித்த 60 நளில் மனைகள், மனை பிரிவுக்கு சிங்கள் சிஸ்டத்தில் அனுமதி தர உள்ளோம். தமிழகத்தின் வளர்ச்சிக்காக 12 மண்டல திட்டத்தை விரைவில் தொடங்க உள்ளோம்.

 

related posts