ஒன்றாரியோ மாகாணத்தில் முதலீடு செய்யும் வெளிநாட்டுப் பிரஜைகளை கனடாவில் குடியேற்றும் திட்டம் மீள அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுமார் 100 வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு இவ்வாறு கனடாவில் குடியேறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.
ஆகக் குறைந்தது சுமார் இரண்டு லட்சம் டொலர்களை முதலீடு செய்வோருக்கு இவ்வாறு ஒன்றாரியோவில் குடியேறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் முதலீட்டாளர்களை கவரும் வகையில் இந்த குடியேற்றத் திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக மாகாண தொழில் அமைச்சர் மொன்டே மெக்டோட்டன் தெரிவித்துள்ளார்.