அதி வேகமாக ஒமிக்ரோன் திரிபு பரவுவதன் காரணமாக நாடாளுமன்ற அமர்வுகளல் பங்கேற்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு வரையறை விதிக்கப்பட உள்ளதாக லிபரல் கட்சி அறிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றுவதனை தவிர்க்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கட்சிக் கூட்டங்களை முழுமையாக மெய்நிகர் அடிப்படையில் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக அரசாங்கத்தின் அவைத் தலைவர் மார்க் ஹொலன்ட் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகளில் வரையறுக்கப்பட்ட உறுப்பினர்களை மட்டும் பங்கேற்கச் செய்யும் தமது கட்சியின் தீர்மானம் குறித்து ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பல்வேறு பகுதிகளிலிருந்தும் அமர்வுகளில் பங்கேற்று மீண்டும் அந்தந்த பகுதிகளுக்கு செல்வதில் காணப்படும் ஆபத்தினை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.