வெளிநாட்டு பயணங்களை வரையறுத்துக் கொள்ளுமாறு தமது நாட்டு மக்களுக்கு கனேடிய அரசாங்கம் ஆலோசனை வழங்க உள்ளது.
ஒமிக்ரோன் திரிபு பரவுகையின் காரணமாக அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்களை தவிர்க்குமாறு கோரப்பட உள்ளது.
இந்த விடயம் குறித்து வெகு விரைவில் திகாரபூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவிட் பரவுகை காரணமாக கடந்த மார்ச் மாதத்திலும் இதேவிதமான அறிவுறுத்தலை சமஷ்டி அரசாங்கம் வெளியிட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டுப் பயணங்களை வரையறுப்பது குறித்து அறிவித்தல் விடுப்பது தொடர்பில் மாகாண முதல்வர்களுடன் பிரதமர் ட்ரூடோ 90 நிமிடங்கள் கலந்துரையாடியுள்ளார்.
கோவிட் பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.