18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 20ம் திகதி முதல் அதிகாரபூர்வமாக பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் தடுப்பூசி ஏற்றிக் கொண்டு ஆறு மாதங்கள் கடந்த அனைத்து 18 வயதுக்கும் முற்பட்டவர்களும் பூஸ்டர் மாத்திரை பெற்றுக்கொள்ள தங்களை பதிவு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்தகங்களில் நாளைய தினம் முதல் பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் அளவில் தடுப்பூசிகள் ஏற்றப்பட வேண்டியது அவசியமானது என மாகாண அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.