ஐமேக்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் பிராட்வே மெகாப்ளெக்ஸ் ஆகியவை, கோவையில், பிராட்வேயின் புதிதாகத் திட்டமிடப்பட்ட மெகாப்ளெக்ஸ் தளத்தில் ஐமேக்ஸ் தியேட்டரை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டில் இந்த திரையரங்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய திரையரங்கில் லேசர் தொழில்நுட்பம், நெக்ஸ்ட் ஜெனரேஷன் லேசர் புரொஜெக்ஷன் சிஸ்டம் மற்றும் 12-சேனல் ஒலி அமைப்பு ஆகிய புத்தம் புதிய தொழில்நுட்ப வசதிகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெரிய நகரங்களைத் தாண்டி மற்ற இடங்களுக்கும் ஐமாக்ஸைக் கொண்டு செல்வதற்கான திட்டம் துவக்கப்படும் என ஐமேக்ஸின் தலைமை விற்பனை அதிகாரி ஜியோவானி டோல்சி கூறினார்.
“தென்னிந்தியாவின் பிராந்திய மல்டிபிளக்ஸ் சங்கிலியான பிராட்வே மெகாப்ளெக்ஸுடன் எங்கள் முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது IMAX ஐ ஒரு புதிய தலைசிறந்த மெகாப்ளெக்ஸ் இடத்திற்கு கொண்டு வந்துள்ளது. பெரிய நகரங்களுக்கு அப்பால் இந்தியாவில் எங்கள் தடத்தை விரிவுபடுத்தும் முயற்சி இது” என்று தலைமை விற்பனையாளர் அதிகாரியான ஜியோவானி டோல்சி, ஐமாக்ஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Imax உடனான கூட்டாண்மை சிறந்த தொழில்நுட்பத்துடன் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்குவ்பதற்கான கூட்டாண்மையாக இருக்கும் என்று பிராட்வே மெகாப்ளெக்ஸ் ஒரு வெளியீட்டில் தெரிவித்துள்ளது.