Home இந்தியா இந்தியா முழுவதும் 7.5 சதவீத பெண்கள் மது அருந்தும் பழக்கம் கொண்டவர்களா?

இந்தியா முழுவதும் 7.5 சதவீத பெண்கள் மது அருந்தும் பழக்கம் கொண்டவர்களா?

by Jey

இந்தியாவில் மதுபானங்கள் விற்பனை, எத்தனை பேர் மது அருந்துகிறார்கள் என்பது தொடர்பாக நாடு முழுவதும் யுபிஎஸ் என்ற நிறுவனம் அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியது . அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2020 ஆம் ஆண்டில் மொத்த மதுபான அளவு 29 சதவீதம் குறைந்துள்ளது.மதுபானங்கள் ஒப்பீட்டளவில் 19.7% குறைந்து உள்ளது, அதே நேரத்தில் பீர் 39.1% குறைந்துள்ளது. தனிநபர் ஆல்கஹால் நுகர்வு என்பது ஆசிய அளவில் (6.4 லிட்டர்) மற்றும் உலக அளவில் (6.2 லிட்டர்) சராசரிகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் (5.5 லிட்டர்) குறைவாக உள்ளது.

இந்தியா முழுவதும் சுமார் 16 கோடி பேர் மது அருந்தும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். இவர்களில் 7.5 சதவீதம்பேர் பெண்கள் ஆவர்கள். குறிப்பாக, கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டங்களில்தான் மதுஅருந்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்திய மதுபானச் சந்தையை பொறுத்தவரை, யூனியன் ஸ்பிரிட்ஸ் என்ற பிராண்டின் கீழ் வரும் மதுபானங்கள் தான் அதிக அளவில் விற்பனை ஆகின்றன. அதிக அளவு விற்பனையாகும் பீர் ரகங்களில் யுனைட்டெட் புரூவெரிஸ் நிறுவனத்தின் பீர்கள் முதலிடத்தில் உள்ளன. கிங் பிஷர் பீர் இந்த நிறுவனத்தின் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டிலேயே மதுபானப் பிரியர்கள் அதிகம் உள்ள மாநிலங்களாக ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, சிக்கிம், அரியானா, இமாச்சலப் பிரதேசம் ஆகியவை இருக்கின்றன.

கள் மற்றும் நாட்டு சாராய விற்பனையிலும் ஆந்திராவும், தெலங்கானாவும் முதலிடத்தில் உள்ளன. அதே சமயத்தில், காஷ்மீர், மேற்கு வங்காளம், மராட்டியம், குஜராத் ஆகிய மாநிலங்களில் கள் மற்றும் நாட்டு சாராயங்களின் விற்பனை மிகக் குறைவாக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

related posts