கனடாவில் புகலிடம் கோருவதற்கு முயற்சித்து வந்த குடும்பமொன்றைச் சேர்ந்த சிறுமியொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த குடும்பம் ஒன்றே அங்கிருந்து தப்பித்து கனடாவிற்குள் புகலிடம் கோருவதற்கு முயற்சித்து வந்தது.
இந்த நிலையில் பத்து வயதான ஆப்கானிஸ்தான் சிறுமி தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உள்ளார்.
குறித்த சிறுமியின் தந்தை கந்தஹாரில் கனேடிய இராணுவம் சார்பில் பணியாற்றிவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவிற்குள் குடியேறுவதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றிருந்த போதிலும், பயணத்தை மேற்கொள்ள முன்னதாக இந்த சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார்.