கனடாவில் மிதமிஞ்சிய அளவில் கோவிட் தடுப்பூசிகள் கையிருப்பில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வசதி குறைந்த நாடுகள் தடப்பூசி ஏற்றுகையில் சிரமங்களை எதிர்நோக்கி வரும் நிலையில் கனடா மித மிஞ்சி அளவு தடுப்பூசி தொகையை களஞ்சியப்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனடா தனது நாட்டு தேவையை விடவும் மூன்று மடங்கு கையிருப்பினை பேணி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச ரீதியான தடுப்பூசி திட்டத்திற்கு கனடா உதவ வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.