கனேடிய சிறைகளில் பூர்வகுடியின பெண்களே அதிகளவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் காணப்படும் சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவிக்கும் அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ள 50 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் பூர்வகுடியின பெண்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் மொத்த சனத்தொகையில் வெறும் ஐந்து வீத சனத்தொகையைக் கொண்ட பூர்வகுடியின மக்கள், மொத்த கைதிகளில் 32 வீதத்தை பிரதிநித்துவம் செய்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
பெண் கைதிகளில் சுமார் 48 வீதமானவர்கள் பூர்வகுடியினப் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலைமை திருப்தி அடையக்கூடிய வகையில் கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.